Saturday, May 7, 2011

அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்!





அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்! 

இன்று ஞாயிற்றுக் கிழமை 
அன்னையர் தினம் 
கொண்டாட்டத்துக்குறிய நாள் 
அன்னையிடம் ஆசி பெற்று 
அவளுக்கு பரிசு தந்து 

இன்று முழுவதும் அவளுடன் 
இருக்க வேண்டும் ! 
பத்து மாதம் சுமந்து 
பெற்று , பாதுகாத்து , வளர்த்து 
இந்த சமுதாய சாக்கடையில் 
நீந்த கற்று தந்தவள் 
அல்லவா தாய் ! 

ஒவ்வொரு குழந்தைக்கும் 
அதன் தாய் தெய்வம்- அல்லவா 
தாய் இல்லாமல் நாம் இல்லை 
தாயை சிறந்த கோவிலும்மில்லை 
உண்மைத் தானே ? 


அன்னையர் தினத்துக்கு 
பரிசு தர வேண்டாமா ? 
பரிசுடன் புறப்பட்டேன் 
என்னை பெற்றதுக்கு - இலஞ்சம் 


பார்த்து ஒரு வருடம் ஆகிவிட்டது 
சென்ற ஆண்டு 
அன்னையர் தினத்தில் பார்த்தது 
ஆவலுடன் , பாசத்துடன் 
புறப்பட்டேன் ! 

அன்னையைக் காண 

என் அன்னை வாழும் 
முதியோர் இல்லத்துக்கு ! 
நல்ல வேளை இன்று 
ஞாயிறு விடுமுறை ! 
இல்லையேல் அடுத்த 
ஆண்டு வரைக் காத்திருக்க 
வேண்டும்! 

அடுத்த அன்னையர் தினத்திற்கு ! 
அன்னையர் தினம் என்று 
இல்லை என்றால் 
பலர் தன் தாய்மாரை 
மறந்திருப்பர் ....

No comments:

Post a Comment